வசூல்ராஜா MBBS திரைப்படமானது கமலின் வெற்றி படங்களில் முக்கியமான ஒரு படமாக பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் கமலஹாசன் அவருக்கு தந்தையாக நாகேஷ் உள்ளிட்டவர் நடித்திருக்கின்றனர்.
இந்த திரைப்படத்தில் ஒரு சில காட்சிகள் மட்டுமே வந்து சென்ற கதாபாத்திரமான சுவாமிநாதன் என்கின்ற சாம்பு மவன் சிறிய கதாபாத்திரத்தில் வந்தாலும் பெரிய அளவு தாக்கத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தி சென்றவர் என்று கூறலாம். பலரும் பல படங்களில் இப்படித்தான் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தோன்றி அதன் பின் சினிமாவில் இருந்து முழுவதுமாக தொலைந்து போய் விடுகின்றனர்.
வசூல்ராஜா திரைப்படத்திற்கு பின் சாம்பு மவன் எங்கு சென்றார் ? என்ன ஆனார் ? என பலரும் கேள்விகள் எழுப்பி அவரை தேட துவங்கியிருக்கின்றனர். இது போன்ற ஒரு சூழலில் தான் அவர் தற்பொழுது உயிருடன் இல்லை என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. அதாவது, ரசிகர் ஒருவர் சுவாமிநாதன் குறித்த விவரங்கள் தெரிய வேண்டும் என்பதற்காக ரெட் இட் வலைதளத்தில் தேடத் வாங்கி இருக்கிறார். அப்பொழுது ஒருவர் அவரின் உண்மையான பெயர் ரத்தின சபாபதி என்றும் தன்னுடைய சகோதரரின் உடன்படித்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.
அதோடு மட்டுமல்லாது தற்பொழுது ரத்தின சபாபதி உயிரோடு இல்லை என தெரிவித்திருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்துவதாக அமைந்திருக்கிறது. ஆனால் உண்மையில் இவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்த ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இந்த வலைதளத்தின் தேடலின் முடிவில் இவ்வாறு ஒரு பதில் மட்டுமே கிடைத்திருக்கிறது எனினும் இந்த பதிலால் ரசிகர்களை சோகம் சூழ்ந்தது உண்மையே.