10 மற்றும் +2 மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி!! ஊக்கத்தொகை வழங்கும் பிரபல நடிகர்!!

Photo of author

By Jeevitha

10 மற்றும் +2 மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி!! ஊக்கத்தொகை வழங்கும் பிரபல நடிகர்!!

நடிகர் விஜய் திரைத்துறையில் புகழ்ப்பெற்று வருகிறார். மேலும் விஜய் திரைத்துறை மட்டுமின்றி விஜய் மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார். இந்த இயக்கத்தின் தலைவராக விஜய் உள்ளார்.

இந்த இயக்கத்தின் மூலம் தனது ரசிகர்கள் வைத்து மக்களுக்கு பல நன்மை செய்து வருகிறார்கள். மேலும் அந்த இயக்கத்தின் முலமாக பல்வேறு நிகழ்ச்சி நடத்தி வருகிறார்கள்.

ஏற்கனவே இலவச பொருட்கள் வழங்குவது, மரம் வைப்பது, ஊக்கத்தொகை வழங்குவது இது போன்ற உதவிகளை விஜய் மக்கள் இயக்கம் செய்து  வருகிறது.

இந்நிலையில் தற்போது விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக தமிழ்நாட்டில்   10 மற்றும் +2 வகுப்பு மாணவர்களை விஜய்  சந்திக்கவுள்ளார். இது மட்டுமின்றி 10 மற்றும் +2  ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்  முதல் மூன்று மதிப்பெண் பெற்ற  மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவுள்ளார்.  இன்று நீலாங்கரையில் இந்த நிகழ்ச்சி நடைப்பெற உள்ளது.

இந்த ஊக்கத்தொகையை  தொகுதி வாரியாக வழங்கவுள்ளார்.  ஆனால்  10 ஆம் வகுப்பில்  492, 491 மதிப்பெண் பெற்ற மணாவர்களுக்கு மாறாக 486 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் நிகழ்ச்சியில்  கலந்துக் கொள்ள  அழைப்பு வந்திருக்கிறது. இந்த சம்பவம் தாம்பரம் தொகுதியில் நிகழ்ந்துள்ளது.

இதனை  குறித்துக் கேட்ட போது எந்த ஒரு பதிலும் விஜய் மக்கள் இயக்கம் அளிக்கவில்லை.  இது போன்று இன்னும் எத்தனை தொகுதியில் நடந்திருக்கிறது என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.