பிக் பாஸ் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்! சீசன் 7 க்கு தயாரான கண்டஸ்ட்டென்ட் லிஸ்ட்..

0
45

பிக் பாஸ் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்! சீசன் 7 க்கு தயாரான கண்டஸ்ட்டென்ட் லிஸ்ட்..

 

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி சீரியல் மற்றும் மக்களுக்கு பிடித்த பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறது.அந்த வகையில் விஜய் டிவிக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது .இதனால் விஜய் டிவியின் டிஆர்பி எப்பொழுதும் டாப் என்றே சொல்லலாம்.

 

மேலும் விஜய் டிவியின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியும் அடங்கும்.சினிமா பிரபலங்கள் முதல் சாமானிய மனிதர்கள் வரை அனைவரையும் ஒன்றிணைத்து தொகுத்து வழங்கப்படும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.தரமான கண்டஸ்டண்ட்களை களமிறக்குவதில் பிக் பாஸ்ஸை அடிச்சிக்க ஆள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அமைந்திருக்கும் இந்த ஷோ.

 

இதன்படி 2017 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 1 ல் தொடங்கி தற்பொழுது 2022 ஆம் ஆண்டு வெளிவந்த சீசன் 6 வரை வெற்றிகரமாக சீசன் முடிந்துள்ளது. ஒரு சீசன் 100 நாட்கள் என்றடிப்படையில் தொகுத்து வழங்கபடுகிறது.மேலும் இந்நிகழ்ச்சிக்கு இவ்வளவு பெரிய ஹிட் கிடைக்க முக்கிய காரணம் ‘ஆண்டவர்’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் கமல் சார் அவர்களின் பேச்சாற்றலும் சிறப்பாக தொகுத்து வழங்கும் விதம் என்று அந்தளவிற்கு நிகழ்ச்சியயை மெருகேற்றியிருப்பார்.

 

மேலும் பிக் பாஸ் சீசன் தொடங்கியது முதல் நிறைவடையும் வரை விறுவிறுப்பிற்கும் சுவாரஸ்யத்திற்கும் பஞ்சமே இருக்காது.இணையத்தில் வியூஸ்கள் பிச்சிகிட்டு போகும் அளவிற்கு கண்டஸ்டன்ஸ் பேச்சு மற்றும் செயல்கள் அமைந்திருக்கும்.

 

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை சாதாரண கண்டஸ்டண்ட்களும் உருவாக்க முடியும் என்பது தான். இதன்படி முந்தைய சீசனில் பங்கு பெற்ற ஜி.பி. முத்து, தாமரை செல்வி ஆகியோரை குறிப்பிட்டு சொல்லலாம்.

 

இவ்வளவு சிறப்பை பெற்றுள்ள பிக் பாஸ் ஷோ வின் இந்தாண்டிற்கான சீசன் 7 வரும் அக்டோபர் மாதம் முதல் வாரம் தொடங்கும் என்ற செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது.இச்செய்தி பிக் பாஸ் ரசிகர்களுக்கு ‘பூஸ்ட் என்று சொல்லலாம்.இந்த சீசனில் ஆண்டவர் அவர்களின் சம்பளம் 150 கோடி என்று சொல்லபப்படுகிறது. முந்தய சீசனில் அவர் வாங்கிய சம்பளத்தை காட்டிலும் தற்பொழுது 20 கோடி அதிகமாகும்.

 

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் அதற்கான ஆடிசென் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மேலும் சில கண்டஸ்டண்டுகளின் பெயர்கள் இப்பொழுதே இணையத்தில் வரத்தொடங்கியுள்ளது. இந்த லிஸ்டில் விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின், நடிகர் பப்லு (ப்ரித்விராஜ் ), டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர், சீரியல் ஆக்டர் தினேஷ் , நடிகை ரேகா நாயர், சமீபத்தில் இணையத்தில் ட்ரெண்ட் ஆனா கோயம்பத்தூர் பெண் பஸ் டிரைவர் ஷர்மிளா ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி முந்தைய சீசன்கள் போல வரக்கூடிய இந்த சீசனிலும் விறுவிறு மற்றும் சுவாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது என்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.