ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவில் சேவை கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், மக்கள் அனைவரும் பிஎஸ்என்எல்க்கு மாறினர். பிஎஸ்என்எல் க்கு மாறிய அனைவருக்கும் அதில் இருந்த ஒரே சிக்கலாக சிக்னல் மட்டுமே இருந்தது.
பல இடங்களில் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்புக்கான சிக்னல் கிடைக்காததால் பலரும் அவதிப்பட்டனர். இதனை மாற்ற அந்நிறுவனம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
தற்பொழுது,மலிவான கட்டணத்தில் பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் BSNL நிறுவனத்தின் வாடிக்கையாளகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனம், கடும் போட்டியை கொடுக்கும் விதிமாக தனது 4G நெட்வொர்க்கை விரிவுபடுத்தும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மேலும் 5G நெட்வொர்க்கிற்கான சோதனை ஓட்டங்களும் தற்போது நடைபெற்ற வருகிறது என்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இணைய சேவை மிக வேகமாக இருக்கும் என்றும், கட்டணமும் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
BSNL க்கு அரசாங்கம் வழங்கிய ஸ்பெக்ட்ரம் பலவீனமாக இருப்பதால் BSNL வழங்கும் 4G நெட்வொர்க் சரியாக வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 700 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 2100 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசைகளை அரசாங்கம் வழங்கியுள்ளது. 2100 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் மூலம் கிடைக்கும் நெட்வொர்க் மிகவும் நன்றாக இல்லை என கூறப்படுகிறது. 700 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் பெரும்பாலும் 5ஜிக்கு பயன்படுத்தப்படுகிறது என்றாலும், பிஎஸ்என்எல் 4ஜிக்கும் இதனை பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.