மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வு?

0
401
Good news for central government employees!! Important information about discount rate!!
Good news for central government employees!! Important information about discount rate!!

 

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி(அலவன்ஸ்) தரப்படுகிறது.அதேபோல் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.

மத்திய அரசானது தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அதிகரித்த பிறகு மாநில அரசு அகவிலைப்படி உயர்வை அதிகரிப்பது வழக்கம்.இந்நிலையில் இம்மாத இறுதியில் தீபாவளி பண்டிகை வரவிருப்பதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதிய குழுவின் அடிப்படையில் அகவிலைப்படி இன்னும் சில தினங்களில் உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தீபாவளி போனஸுடன் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்று மத்திய அரசு ஊழியர்கள் எதிரிபார்த்து காத்திக்கொண்டிருக்கின்றனர்.மத்திய அரசு ஊழியர்களுக்கு முதலில் ஹோலி பண்டிகைக்கு முன் அகவிலைப்படி உயரும்.அடுத்து தீபாவளிக்கு முன்னர் அகவிலைப்படி உயரும்.அதன்படி இந்த மாதம் 3 முதல் 4% அகவிலைப்படி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் மத்திய அரசின் நேரடி பலனை பெறுகிறது.ஒருவேளை அகவிலைப்படி 3% அதிகரித்தால் DA எவ்வளவு உயரும் என்று இங்கு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு உங்கள் அடிப்படை ஊதியம் ரூ.18,000 என்றால் DA ரூ.9,000 ஆக இருக்கும்.3% அகவிலைப்படி உயர்ந்தால் உங்களுக்கு ரூ.9000 + ரூ.540 ஆக உயரும்.

Previous articleவிவசாயிகளுக்கு ஜாக்பாட்.. விவசாயக் கடன் தள்ளுபடி; முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!!
Next articleமீண்டும் குறைந்த தங்கம் விலை!! மேலும் குறைய வாய்ப்புகள் உள்ளதா??