கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்!! நகைக்கடன் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியீடு!!
தமிழகத்தில் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் கடன் பேருதவியாக இருந்து வருகிறது.தங்களிடம் உள்ள தங்க நகைகளை எமர்ஜென்சி தேவைக்கு கூட்டுறவு வங்கி மூலம் அடகு வைத்து உரிய தொகை பெறமுடியும்.
அதேபோல் குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு நகைகடன் வழங்கப்படுவதால் கிராமப்புற விவசாயிகள் பெரிதும் பயன்பெற்று வருகின்றனர்.தமிழகத்தில் தற்பொழுது 680 வீட்டுவசதி சங்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில் முக்கிய வீட்டுவசதி சங்கங்களில் மட்டுமே பாதுகாப்பு பெட்டக வசதி உள்ளது.இந்த வசதி இருக்கும் சங்கங்களில் மட்டுமே நகைக்கடன் பெற முடியும்.
இதர சங்கங்களில் நகைக்கடன் வழங்கும் அனுமதி இருந்தாலும் பாதுகாப்பு பெட்டகம் இல்லாததால் வங்கி தரப்பு மற்றும் வாடிக்கையாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர்.இந்நிலையில் சென்னை,கோவை,திருச்சி,சேலம்,தஞ்சாவூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 10 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் நகைக்கடன் வழங்க பாதுகாப்பு பெட்டகம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.
அனைத்து வீட்டுவசதி சங்கங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு எளிதில் நகைக்கடன் கிடைக்க வேண்டுமென்ற நோக்கில் பாதுகாப்பு பெட்டகங்களை அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி இருப்பதால் இனி சிக்கலின்றி வாடிக்கையாளர்கள் நகைக்கடன் பெற முடியும்.இதற்காக தமிழக அரசு ரூ.57 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளதாக கூட்டுறவு வீட்டுவசதி துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.