விவசாயிகளுக்கு வெளிவந்த குட் நியூஸ்! அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட தகவல்!
கடந்த தேர்தலின் போது அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. அப்போது திமுகவானது பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்குதல், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குதல், நான் முதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்களை வெளியிட்டது, எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது அதனைத் தொடர்ந்து திமுகவானது நான் முதல்வன் திட்டம், பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணச்சீட்டு போன்ற திட்டங்களை அமல்படுத்தியது.
ஆனால் குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் தற்போது வரை அமலுக்கு வரவில்லை. நேற்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பட்ஜெட் தாக்கலின் பொழுது குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டத்திற்கு அறிவிப்பு வெளியாகும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என இ பி எஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்தது. அதனை தொடர்ந்து இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் முறை வைத்து மின்சாரம் வழங்குவது ஏற்புடையது அல்ல திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணம் புரியாத புதிர் தான் என அவர் விமர்சித்து பேசியிருந்தார்.
தற்போது தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு 12 மணி நேரம் இலவச மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த 12 மணி நேரத்தை 24 மணி நேரமாக உயர்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தி இருந்தார்.
மேலும் இதுகுறித்து மின் வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோரிக்கையில் அதிமுக ஆட்சிக்காலத்தில் 12 மணி நேரம் தான் மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டிலிருந்து 24 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.