விவசாய பெருமக்களுக்கு ஒரு நற்செய்தி:மானியம் பெற இப்பொழுது விண்ணப்பிக்கலாம்

Photo of author

By Parthipan K

நம் நாட்டு விவசாயத்தை முன்னேற்றமும் விவசாயிகள் பிரச்சனைகள் நீங்கவும் மத்திய மற்றும் மாநில அரசு நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளது.அதில் ஒரு திட்டமாக பிரதமரின் நுண்ணீா்ப் பாசனத் திட்டமும் அடங்கும்.

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தோட்டக்கலை மற்றும் விவசாய பெருமக்களுக்கு, சொட்டு நீர்ப்பாசனம் வழங்கும் திட்டத்திற்கான மானியம் பெற விண்ணப்பக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

இதற்காக நிகழாண்டுக்கு சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க 4,350 ஹெக்டோ பரப்பளவுக்கு ரூ. 30.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு.

சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு மற்றும் குறு விவசாயிகள் மானியம் 100% வழங்கப்படும் என்றும் பெரு விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ரூ. 3000 ஹட்டருக்கு வழங்கப்படும். இதற்கு சரியான வங்கி கணக்கு புத்தகங்களை நகலெடுத்த தரவேண்டும்.

சொட்டு நீர் பாசனம் உபயோகப்படுத்தும் இடத்தில் விவசாயிகள், ஒன்றே கால் அடி முதல் 2 அடி அகலம் வரையிலும், 2 அடி ஆழத்துக்கு குறையாதவாறும் சொந்த செலவில் குழியிட்டு வைத்திருக்க வேண்டும்.

பின்பு, வட்டாரத் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் வயல் ஆய்வு மேற்கொண்ட பின்னர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அதற்கான பட்டியல்களைச் சமா்ப்பித்து மானியம்பெறலாம்.

இதுகுறித்த தகவல்களை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா அவர்கள் வியாழக்கிழமை அன்று வெளியிட்டார்.