விவசாயிகளுக்கு குட் நியூஸ் !! மின்சார வாரியம் கொடுத்த சர்ப்ரைஸ் !!

Photo of author

By Rupa

தமிழகத்தில் விவசாயத்திற்கு இலவசமாக  மின்சாரம் வழங்குகிறது மின் வாரியம். பொதுவாக 100 யூனிட் மின்சாரம் வீடுகளுக்கு   இலவசமாக  வழங்கியும், குடிசை வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குகிறது. அந்த வகையில் 23 லட்சத்து 56 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளது.  ஒரு இணைப்புக்கு 30000 ரூபாய் செலவு ஆவதாகவும்  மின்சார வாரியம் தரப்பில் கூறப்படுகிறது.

மொத்தமாக  மின்சார வாரியத்திற்கு ஆண்டுக்கு 7,280 கோடி செலவாகிறது. கடந்த வருடம் 50000 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்க அனுமதி வழங்கியதில் 20000 மட்டுமே வழங்கப்பட்டது. இந்த இணைப்பு வழங்க இந்த வருடம் மார்ச் மாதம் வரை கால அவகாசம் தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்த நிலையில் மீதமுள்ள இணைப்புகள் வழங்க தமிழக அரசை அனுமதி கேட்டுள்ளது மின் வாரியம். 2021 ஆம் ஆண்டில் 4.54 லட்சம் மின் இணைப்புகள் நிலுவையில் இருந்தது.

அந்த வருடமே ஒரு லட்ச இணைப்புகள் மற்றும் 2022-23ல் 50000 இணைப்புகள் வழங்கப்பட்டது. கடந்த 2023-24-ல் 50000 இணைப்புகளில் இந்த நிதியாண்டு 20000 இணைப்புகள் மட்டுமே  வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு போக மீதமுள்ள இணைப்புகளை வழங்க அரசிடம் அனுமதி கேட்டு உள்ளதால், அனுமதி கிடைத்ததும், விரைவாக மின் இணைப்புகள் வழங்கப்படும் என்ற நற்செய்தியை மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.