கவுர்மென்ட் ஊழியர்களுக்கு குட் நியூஸ்! வாகனம் வாங்க அரசே வழங்கும் முன்பணம்!
தற்போது நிதித் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட தகவலின் படி இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாங்க விரும்பும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களுடைய பணநிலைக்கு ஏற்ப முன்பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தமிழக அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ரூ 6 முதல் 14 லட்சம் வரையில் முன்பணம் தொகை அளிக்கப்படுகின்றது.
இந்நிலையில் வாகன துறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.மேலும் புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றனர்.தற்போது மின்சார வாகனங்களை தான் பெரும்பாலானோர் வாங்குவதால் அதிகம் பிரபலம் அடைந்துள்ளது .இந்த வாகங்களை பெற அரசு ஊழியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றது.
மேலும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டால் கார்பன்டை -ஆக்சைடு வாயு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.அதனால் தமிழக அரசு ஊழியர்கள் மின்சார வாகனங்களை வாங்குவதற்கு வசதியாக இருக்க முன்பணத் தொகை வழங்க போக்குவரத்துத் துறை பரிந்துரைகளை அளித்துள்ளது.இந்நிலையில் இந்த பரிந்துரைகளை ஏற்று மின்சார வாகனங்களை தமிழக அரசு ஊழியர்களும் வாங்க அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.