அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!
தமிழ்நாட்டில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவை சார்ந்த பணியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சியான செய்தி ஒன்றினை அறிவித்து உள்ளார்.
அதன்படி தமிழ் நாட்டில் திமுக பதவி ஏற்ற பிறகு அரசு ஊழியர்கள், மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு பதவி உயர்வுகள் பணி நியமனங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது.அதன்படி சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் ஒய்வூதியதாரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சியான செய்தி ஒன்றினை அறிவித்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கான மிகை ஊதியம், சி மற்றும் டி பிரிவை சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து முதல்வர் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் அரசின் பல்வேறு நலத் திட்டங்களுக்கு அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், ஆகியோர்களுக்கு வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு, மிகை ஊதியம் வழங்கிட தமிழக முதல்வர் உததரவிட்டுள்ளார். அதன்படி சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3000 என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.
மேலும் தொகுப்பூதியம் சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள், மற்றும் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூ.1000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.வழங்கப்படும். சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு( முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் ) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள், ஆகியோருக்கு ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்படும். மேற்கூறிய மிகை ஊதியம் பொங்கல் பரிசு வழங்குவதன் மூலம் அரசிற்கு ரூ.221 கோடியே 42 இலட்சம் செலவு ஏற்படும்.
முதல்வரின் இந்த அறிவிப்பால் சுமார் 8 இலட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுகின்றனர். இதற்கு அரசு ஊழியர்கள் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.