மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. என் நிலையில் 3 சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட்டு, மொத்தமாக அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 53 சதவீதம் சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தீபாவளிக்கு இது அனைவருக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்த நிலையில், தற்போது மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
2014 ஆம் ஆண்டில் மத்திய அரசு ஏழாவது ஊதியக் குழுவை அமைத்தது. இதனை தொடர்ந்து பத்து வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது அரசு எட்டாவது ஊதிய குழுவை அமைத்துள்ளது.
மேலும் இந்த எட்டாவது ஊதிய குழு சில மனுக்களை அரசிடம் முன் வைத்திருந்தது, அதற்காக தற்பொழுது நவம்பர் மாதத்தில் ஒரு முக்கியமான கூட்டம் நடைபெறும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2016 ஜனவரி மாதத்தில் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனைப் போலவே எட்டாவது ஊதிய குழுவின் பரிந்துரைகளையும் அரசு நடைமுறைப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் குறைந்தபட்ச மாதச் சம்பளம் ரூ.18,000-ல் இருந்து ரூ.34,560 ஆக உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.