Gas Cylinder: மத்திய அரசு இலவச சிலிண்டர் இணைப்புகள் வழங்க பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டத்தின் மூலம் நன்மை பெற எப்படி விண்ணப்பிக்கலாம் என்று இங்கு குறிப்பிடப்படுகிறது.
மத்திய அரசு மக்களுக்கு தேவையான பல நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச கேஸ் சிலிண்டர் வழங்க பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அந்த திட்டத்தை பெற சில விதிமுறைகள் உள்ளன.
அது விண்ணப்பதாரர் ஏற்கனவே இலவச எரிவாயு இணைப்பு வைத்திருக்கக்கூடாது, ஏழைப் பெண்கள் மட்டுமே இந்த திட்டத்தில் பயன் அடைய முடியும். மேலும் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். மிக முக்கியமாக இந்தியாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இந்த திட்டத்திற்கு தகுதி உள்ளவர்கள் முதலில் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் இணையதளத்திற்கு செல்லவும், அதில் முகப்பு பக்கத்தில் “Apply For New Ujjwala 2.0 Connection” என்பதை கிளிக் செய்யவும்.
அதில் இந்தியன், ஹெச்பி, பாரத் என் மூன்று நிறுவனங்கள் பெயர் தோன்றும். அதில் உங்களுக்கு விருப்பமான நிறுவனத்தை கிளிக் செய்து விண்ணப்பதாரறின் பெயர் மற்றும் முகவரியை தேர்ந்தெடுத்த பிறகு “Next” என்பதை கிளிக் செய்யவும். அதில் உங்களுடைய பெயர், முகவரி என அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்து “Sumbit” என்பதை கிளிக் செய்யவும். இப்போது உங்களுடைய இலவச சிலிண்டர் விண்ணப்பம் நிறைவடைந்துவிடும்.