வெங்காயம் விலை:கடந்த ஒரு மாதமாக வெங்காயமும், தக்காளியும் போட்டி போட்டு விலையானது அதிகரித்தது. அந்த நிலையில் ரயிலில் டன் கணக்கில் மூட்டை மூட்டையாக வெங்காயம் வருவதால் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு வெங்காயத்தை கொள்முதல் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்யும் நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வெங்காயம் விலை குறைந்துள்ளது. அதாவது சென்னை, டெல்லி, உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அரசு தமிழகத்திற்கு கூடுதல் வெங்காயத்தை அனுப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழையின் காரணமாக வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் தான் விலை அதிகரித்துள்ளது. அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் விலை குறையும் என மக்கள் நம்புகிறார்கள். இந்த நிலையில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறையின் விலை நிலைப்படுத்தல், நிதியின் கீழ் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு வெங்காயத்தை கொள்முதல் செய்து பல்வேறு மாநிலங்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய அனுப்பி வருகிறது.
அதனை தொடர்ந்து நாசிக்கில் இருந்து அனுப்பப்பட்ட 840 மெட்ரிக் டன் வெங்காயம் ரயில் மூலம் சென்னைக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வந்தது. இரண்டாவது முறையாக 840 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றிச் சென்ற ரயில் தலைநகர் டெல்லியில் விநியோகம் செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கூடுதல் வெங்காயம் அனுப்பவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.