வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த குட்  நியூஸ்! இனி சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை!

Photo of author

By Parthipan K

வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த குட்  நியூஸ்! இனி சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை!

இந்தியாவில் சுங்கச்சாவடிகள் மூலம் வசூல் செய்யும் கட்டணம் குறித்து தற்போது மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த தகவலில் அடுத்த ஆண்டுக்கு முன்பாக இந்தியாவில் 26 பசுமை வழிச் சாலைகள் அமைக்கப்படும். அந்த சாலைகள் அனைத்தும் அமைக்கப்பட்டதற்கு பிறகு சுங்க கட்டணம் வசூல் செய்வதில் புதிய விதிகள் அமல்படுத்தப்படும்.

மேலும் பசுமை விரைவு  சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு அமெரிக்காவில் இருக்கும் சாலைகளின் தரத்திற்கு ஈடாக இந்திய சாலைகளும் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் சுங்கச்சாவடிகள் கட்டணம் வசூலிப்பதில் பெரிய மாற்றம் வரும் என நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

சுங்கச்சாவடிகள் கட்டணம் செலுத்த நீண்ட நேரம் வாகனங்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை தற்போது நிலவி வருகிறது. அதனை குறைப்பதற்காக பாஸ்ட் டேக் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் மூலம் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணம் எடுக்கப்படுவதால் வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் குறைந்தது.

மேலும் வாகனங்களில் ஜிபிஎஸ் வசதி மூலம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படும் முறையும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தும் பெரும் சுமை குறையும் என கூறப்படுகிறது. மேலும் அண்மையில் நம்பர் பிளேட் சார்ந்த கட்டணம் வசூலிக்கும் முறையையும் அறிமுகப்படுத்துவதற்கான ஆலோசனைகளை அரசு மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.