வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! மத்திய அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
ஓராண்டு காலமாக மக்கள் கொரோனா தொற்றால் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு மக்கள் சில தளர்வுகளுடன் வெளிய செல்ல ஆரம்பித்தனர்.ஊரடங்கு காலத்தில் மக்கள் வண்டியை எடுத்துக்கொண்டு எங்கும் செல்ல இயலவில்லை.அதுமட்டுமின்றி கொரோனா தொற்றால் சென்ற வருடம் வாகனம் பதிவு புதுபித்தல்,வாகன உரிமம் புதுபித்தல் என அனைத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
அதன்பின் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுச்சாலைத்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டது.ஓட்டுனர் உரிமத்தை 5 வருடத்திற்கு ஒருமுறை புதுபித்துக் கொள்வதுதான் வழக்கமாக வைத்திருந்தனர்.புதிய அறிவிப்பாக வருடம் ஒருமுறை வாகனர் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டது.
இந்த நடைமுறை ஆனது செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கூறியது.இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.தற்போது கொரோனா 2 வது அலை உருவாகி வருவதால்,கொரோனா தொற்றின் பரவலைத் தடுக்க ஓட்டுனர் உரிமம் புதுபித்தல்,வாகன பதிவு புதுபித்தல் என அனைத்திற்கும் 3 மாத கால அவகாசத்தை மத்திய சாலை நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.
இதுக்குறித்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச டி.ஜி.பி.க்கள் போக்குவரத்துத்துறை செயலாளர்கள் மற்றும் போக்குவரத்துத்துறை ஆணையர்களுக்கும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுச்சாலைத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.அதில் அவர்கள் கூறியது,இந்த கால நீட்டிப்பு உத்தரவை அனைத்து மாநிலங்களும் ஏற்று செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.