மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு பற்றி வெளியிட்ட அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் மற்றும் கயானா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தாலும் நமக்கு அதில் பெரிதும் பாதிப்பு ஏற்படவில்லை. அதனால்தான் எரிபொருட்களின் விலையில் பெரிதும் மாற்றம் இல்லாமல் உள்ளது.
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கடைசியாக பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.2 விலை குறைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 220 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. எனினும் பெட்ரோல் டீசல் விலை பொதுமக்களுக்கு ஒரு தீராத சுமையாகவே இருந்து வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை அதிகரிக்க கூடும் என்ற கணிப்பு உருவாக ரஷ்யா – உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக இருந்தது. எனினும் பிரேசில் மற்றும் கயானா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதனால் பெரிய அளவு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
எதிர்காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த நம்பிக்கை வாகன ஓட்டிகளுக்கும் பொது மக்களுக்கும் மகிழ்ச்சியை அளிப்பதுடன், அவர்களின் வாழ்க்கை தரத்தை சீரமைக்கும் விதமாகவும் அமையும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.