மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!! போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் ஒருமுறை டெபாசிட் செய்தால் 4,50,000 ரூபாய் வட்டி!!

Photo of author

By Gayathri

போஸ்ட் ஆபீஸில் பல வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அதில் ஐந்து ஆண்டுகளுக்கான சேமிப்பு திட்டங்களும் உள்ளது. முதலீட்டாளர்கள் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதன் மூலம் சுமார் ரூ.4,50,000 வட்டியினை பெற முடியும். இதனால் முதலீட்டாளர்களும் போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பாதுகாப்பான முதலீட்டு திட்டம் வேண்டுமென நினைப்பவர்கள் போஸ்ட் ஆபீஸ் இல் உள்ள இந்த ஐந்தாண்டு திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் அதிகப்படியான வட்டியும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

போஸ்ட் ஆபீஸ் செயல்பட்டு வரும் செல்வமகள் திட்டம், செல்வ மகன் திட்டம் மற்றும் முதியவர்களுக்கான இன்சூரன்ஸ் திட்டங்கள் என பலவும் ஏழை மக்களுக்கும் பயனளிப்பதாக உள்ளது.

இவை மட்டுமின்றி, எந்தவொரு குடிமகனும் இந்தத் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். இதில் முதலீட்டாளர்கள் 7.50% வட்டியைப் பெறுலாம். இதில் முதலீடு செய்வதற்கு பிரிவு 80C இன் கீழ் ரூ.1.50 லட்சம் வரை வருமான வரிவிலக்கு பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.