மக்களுக்கு ஒரு இனிய செய்தி ! இனி அமோசான் பேடிஎம் மூலம் கேஸ் முன்பதிவு!

0
120

இனிமேல் அமேசான் ,பேடிஎம் மூலமாக முன்பதிவு செய்ய இயலும்.இந்தியன் ஆயில் ,இந்துஸ்தான் பெட்ரோலியம் ,பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மக்களுக்கு வீடு வீடாக சென்று கேஸ் வினியோகம் செய்து வருகின்றது. தமிழகத்தில் மொத்தம் 2.38 கோடி வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில் , தற்போது எண்ணெய் நிறுவனங்கள் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

அமேசான் ,பேடிஎம் மூலம் இனி சமையல் கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் வசதியை எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலின் மூலம் முன்பதிவு செய்ய அவற்றிலுள்ள ‘பேபில்’ என்ற பகுதிக்கு சென்ற கேஸ் சிலிண்டர் பதிவு தேர்வு செய்ய வேண்டும்.

பின்னர் தொடர்புடைய எண்ணெய் நிறுவனத்தை தேர்வு செய்து, பதிவு செய்திருந்த மொபைல் எண் அல்லது சிலிண்டர் இணைப்பு எண்ணைய் பதிவு செய்ய வேண்டும். இதனைதொடர்ந்து ஏஜென்சி மூலமாக சிலிண்டர் வீடு வீடாக வினியோகம் செய்யப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous articleவயித்து பிள்ளையோட குத்தாட்டம் போடும் மைனா!!
Next articleதலையில் இடி விழுந்தது போல இருக்கு.. என்னால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை!! கண்ணீர் விடும் இமான் அண்ணாச்சி!