திருவள்ளூர் மக்களுக்கு குட் நியூஸ் வந்தாச்சு.. மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் சமூக பணியாளர் வேலைக்கு தயாராகுங்கள்!!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் சமூக பணியாளர் பதவிக்கு ஒப்பந்தம் அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமான பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 13-09-2023 வரை வரவேற்கப்படுகிறன.
அதன்படி திருவள்ளூர் மாவட்ட நல சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாவட்ட புகையிலை பொருட்கள் பயன்பாட்டு கட்டுப்பாட்டு மையத்தில் (District Tobacco Control Cell) காலியாக உள்ள பணியடங்களுக்கு தற்பொழுது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்: சமூக பணியாளர்
கல்வி தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் சமூகவியல் அல்லது சமூக பணியாளர் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் அதில் குறைந்து இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.இதனை தொடர்ந்து சுகாதார துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: இப்பதவிக்கு மாதம் ரூ.23,800/- சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: திருவள்ளூர் மாவட்ட இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அவற்றை பூர்த்தியிட வேண்டும்.இந்த விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாக வரவேற்கப்படுகிறன.மேலும் இந்த சமூக பணியாளர் பதவி முற்றிலும் தற்காலிகமானது என்றும் எந்த ஒரு காலத்திலும் நிரந்தரம் செய்யப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதார பணிகள்,மாவட்ட நலவாழ்வு சங்கம்
துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம்,54/5. ஆசூரி தெரு,
திருவள்ளூர் மாவட்டம் – 602 001.
கடைசி தேதி: விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 13-09-2023 ஆகும்.
சமூக பணியாளர் பற்றி முழு விவரம் அறிய,
தொலைபேசி எண்: 044 -27661562
மின்னஞ்சல் முகவரி: [email protected]