இனி கரண்ட் பில் கட்ட வேண்டாம்.. இதோ அரசு தரும் ரூ 75000 மானியம்!!

Photo of author

By Gayathri

தமிழக அரசு சார்பில் அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக 100 யூனிட் வரை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விசைத்தறி வைத்திருப்பவர்களுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரமும், கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் வரை இலவசம் மின்சாரமும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு மின்சார கட்டண உயர்வு அதிகரித்துள்ளது. இதனை சமன் செய்யும் விதமாகவும் இயற்கை வளங்களை மின்சாரத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கிலும் தமிழக அரசு புதிதாக ஒரு திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

“மேற்கூரை சோலார் பேனல்” என்ற புதிய திட்டத்தின் மூலம் வீடுகளில் சோலார் பேனல்களை அமைக்க விரும்புபவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சில மாநிலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்களுக்கு, 1 கிலோ வாட் சோலார் பேனலுக்கு ரூ.30,000, 2 கிலோ வாட்டிற்கு ரூ.50,000, 3 கிலோ வாட்டிற்கு ரூ.78,000 என அரசு மானியம் வழங்கப்படுகிறது.

இந்த சோலார் பேனல் மூலம் பெறப்படும் மின்சாரம் வீடுகளுக்கு பயன்படுத்துவதற்கும், மேலும் இதில் ஏதேனும் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டால் 300 யூனிட் வரை இலவசம் மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோலார் பேனல் மூலம் வெயில் காலங்களில் அதிகமாக பயன்பட முடியும். மழைக்காலங்களில் போதுமான அளவு மின்சாரம் இதிலிருந்து கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தில் சேர விரும்புபவர்கள் அரசு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.