காவலர்களுக்கு குட் நியூஸ்.. “ஸ்மார்ட் கார்டு” பயன்படுத்தி அரசு பேருந்துகளில் இனி இலவசமாக பயணம்!!

Photo of author

By Divya

காவலர்களுக்கு குட் நியூஸ்.. “ஸ்மார்ட் கார்டு” பயன்படுத்தி அரசு பேருந்துகளில் இனி இலவசமாக பயணம்!!

சமீபத்தில் நாங்குநேரியில் அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்கும் விவகாரத்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி-நடத்துனர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

நாங்குநேரி நிறுத்தத்தில் நின்ற அரசு பேருந்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி அரசு ஏறினார்.அவரிடம் டிக்கெட் எடுக்கும்படி நடத்துநர் சொல்லியிருக்கிறார்.காவலர்கள் அரசு பேருந்தில் பயணம் செய்ய கட்டணம் கிடையாது என்று ஆறுமுகப்பாண்டி தெரிவித்த நிலையில் வாரண்ட் இல்லாத பட்சத்தில் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று நடத்துநர் தெரிவித்திருக்கிறார்.

இதனால் காவலர்-நடத்துனருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.இவர்கள் இருவரையும் பேருந்தில் இருந்த பயணிகள் சமாதானப்படுத்தும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது.

இதனை தொடர்ந்து காவலர் ஆறுமுகப்பாண்டி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து கழகம் தரப்பில் அறிவுறுத்தபட்டது.போக்குவரத்து கழகத்தை பழி தீர்க்கும் நோக்கில் போக்குவரத்து விதியை பின்பற்றாத அரசு பேருந்துகளை மடக்கி அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் போக்குவரத்து காவல்துறை ஈடுபட்டது.

250க்கும் அதிகமான அரசுப் பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீசார் தொடர்ந்து அபராதம் விதித்தால் காவல்துறை-போக்குவரத்து துறைக்கு இடையே மோதல் முற்றியது.இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் ஆறுமுகப்பாண்டிமற்றும் அரசு பேருந்து நடத்துநர் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து சமாதானம் செய்த வீடியோ வெளியானது.

இந்நிலையில் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க தமிழகத்தில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு அரசு பேருந்துகளில் பயணம் செய்ய ஸ்மார்ட் கார்டு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

வருகின்ற ஜூலை மாதத்தில் இருந்து காவலர்களுக்கு ஸ்மார்ட் கார்டு விநியோகிக்கப்பட உள்ள நிலையில் காவலர்கள் இதை பயன்படுத்தி பணி செய்யும் மாவட்டத்திற்கு அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க முடியும்.