ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்!! மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!!

Photo of author

By Jeevitha

Ration Card: ரேஷன் அட்டைதரர்களுக்கு சில நாட்களாக கோதுமை கிடைக்கவில்லை. இதை அறிந்து அரசு ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளது.

ரேஷன் கடைகளின் மூலம் மக்களுக்கு தேவையான பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பலரும் பயனடைந்து வருகிறார்கள். ரேஷன் அட்டை மூலம் மாதந்தோறும் மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் கிடைத்து வருகிறது. முந்தைய நாட்களில் மண்ணென்ய்,கோதுமை, உளுத்தம் பருப்பு போன்ற பொருட்கள் கிடைத்தன.

ஆனால் சில நாட்களாக கோதுமை தட்டுப்பாட்டின் காரணமாக மக்களுக்கு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட கோதுமை 1,038 டன்னாக குறைத்தது ஆகும். இதனால்  தமிழக உணவு துறை சார்பில் மத்திய அரசுக்கு வழக்கம் போல கோதுமை தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும் என கடிதம் எழுதியது. மேலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் மத்திய அரசு தமிழகத்திற்கு கோதுமை ஒதுக்கீட்டை 8,500 டன்னில் இருந்து 17,100 டன்னாக அதிகரித்துள்ளது.

மேலும் இந்த மாதம் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுக்கு விருப்பம் உள்ள பொருட்கள் அதாவது அரிசிக்கு பதில் கோதுமை என இலவசமாக வாங்கி கொள்ளலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் முன்னதாக கோதுமை தட்டுப்பாடு இருந்த நிலையில் ரேஷன் கடைக்கு முதலில் வருபவர்களுக்கு கிடைத்தது. சிறிது கால தாமதமாக வருவதால் அவர்களுக்கு கிடைக்காமல் போனது. அதன் அடிப்படையில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.