ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
நமது இந்தியாவில் நாம் இந்திய குடிமகன் என்று அடையாளம் காண்பிக்க பல ஆவணங்களில் ஒன்றுதான் ரேஷன் கார்டு. இந்த ரேஷன் கார்டு வறுமைக் குன்றிய எளிய மக்களுக்கும் பெரும் உதவியாக இருக்கிறது. தற்பொழுது இந்தியாவில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் எந்த ஊரில் இருந்து கொண்டும் அங்கு வழங்கும் சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் தற்பொழுது அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்குவது டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. அதாவது பொருள்கள் வாங்கியதும் குறுஞ்செய்தியாக குடும்ப தலைவர் அல்லது குடும்ப தலைவியின் தொலைபேசி எண்ணிற்கு வந்துவிடும்.
அதேபோல பயோமெட்ரிக் முறை பயன்படுத்தி கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். இந்த பயோ மெட்ரிக் முறையில் அனைத்து மாநிலங்களிலும் பல இடையூறுகள் நடந்து வருகிறது. பெரியோர்கள் பொருட்களை வாங்க ரேஷன் கடைக்கு செல்லும் பொழுது அவர்களது ரேகை சரியாகப் பதிவு செய்ய முடியவில்லை. அதனால் அவர்களால் பொருள்களை பெற இயலவில்லை. இந்த குற்றச்சாட்டை அனைத்து மாநிலங்களிலும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதனை தடுக்க தற்பொழுது உணவு பொருள் வழங்கல் துறை அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் இனி பொருட்களை வாங்க வருபவர்களின் கைரேகை சரியாக பதிவு ஆகவில்லை என்றால் வேறு ஒரு வழிமுறைகளை பின்பற்றி உரிய ஆவணங்களை பெற்றுக்கொண்டு அவர்களைத் திருப்பி அனுப்பாமல் உணவுப்பொருள்களை கொடுத்து அனுப்ப வேண்டும் என கூறியுள்ளனர். அதேபோல ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தரமாக உள்ளதா என்று கண்காணித்து வழங்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். எனவே இனி கைரேகை சரியான முறையில் பதிவு ஆகவில்லை என்றால் மாற்று வழியை பயன்படுத்தி ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.