SC/ST மாணவர்களுக்கு குட் நியூஸ்!! கல்வி உதவித் தொகை பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

Photo of author

By Divya

SC/ST மாணவர்களுக்கு குட் நியூஸ்!! கல்வி உதவித் தொகை பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

Divya

ஏழை எளிய மாணவர்களின் நலனிற்காக தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கி வருகிறது.அதேபோல் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் வங்கி கணக்கில் உதவித் தொகை செலுத்தி வருகிறது.

மாணவர்களின் உயர்கல்வி ஆர்வத்தை அதிகரிக்க தமிழக அரசு தொடர்ந்து உதவித் தொகை,ப்ரீ பஸ் பாஸ் வழங்கி வருகிறது.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு என்று சீருடை,புத்தகம் போன்றவற்றை வழங்கி வரும் தமிழக அரசு தற்பொழுது பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது குறித்த தகவலை வெளியிட்டிருக்கிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலததுறை மூலமாக SC மற்றும் ST மாணவர்களுக்கு 2024-2025 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்மந்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவ மாணவியர் இந்த மாத இறுதிக்குள் அதாவது மே 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியான மாணவ,மாணவியர் http://umis.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை நிரப்பி ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்:

1)வருமானச் சான்றிதழ்
2)சாதி சான்றிதழ்
3)ஆதார் அட்டை
4)வங்கி கணக்கு எண்

2024-2025 ஆம் கல்வியாண்டில் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்லூரி ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி விண்ணப்பிக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.எனவே மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.