மூத்த குடிமன்களுக்கு குட் நியூஸ்! மத்திய அரசின் இந்த திட்டம் மூலம் இலவச மருத்துவ சிகிச்சை!!

Photo of author

By Divya

மூத்த குடிமன்களுக்கு குட் நியூஸ்! மத்திய அரசின் இந்த திட்டம் மூலம் இலவச மருத்துவ சிகிச்சை!!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில்,நாட்டில் 70 வயதை கடந்த அனைத்து மூத்த குடிமக்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் இலவச மருதத்துவ சிகிச்சைக்கான காப்பீடு அட்டை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்திருந்தார்.

அதன்படி கடந்த ஜூன் 27 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் 70 வயதை கடந்த அனைவருக்கும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.இதனால் தற்பொழுது ஆயுஷ்மான் திட்டத்தில் அதிகமான மருத்துவமனைகள் சேர்க்கப்பட உள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் நாட்டு மக்களுக்கு சுகாதார சேவை வழங்குவதற்கான திட்டமாகும்.தற்பொழுது வரை சுமார் 12 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு ரூ.5,00,000 வரையிலான இலவச மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு அட்டை பெற்றுள்ளனர்.

மருத்துவ கட்டணம்,மருந்து,அறைக் கட்டணம்,பரிசோதனை உள்ளிட்ட சேவைகள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அடங்குகின்றன.ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் இந்த ஆயுஷ்மான் திட்டத்தால் கோடிக்கணக்கான ஏழை,எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இலவச காப்பீட்டு தொகைக்கான வரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10,00,000 வரை உயர்த்தப்படலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.காப்பீட்டு தொகையின் வரம்பு அதிகரித்தால் 70 வயதை கடந்த கோடிக்கணக்கான மூத்த குடிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.