சேலம் மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ்! இனி இதை ஆன்லைனிலேயே செய்து கொள்ளலாம்!
சேலம் மாவட்டத்தில் மனைகள் பிரிப்பது குறித்து கேட்க வேண்டும் என்றாலும் அதனை பதிவு செய்ய வேண்டும் என்றாலும் நேரடியாக அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது. இவ்வாறு இருந்து வந்த நிலையில் அதனை டிஜிட்டல் முறைக்கு மாற்றினர். சேலம் மாவட்டத்தில் இனி மனைகள் பிரிக்க வேண்டும் என்றால் அது குறித்து ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம் என தெரிவித்திருந்தனர்.
அதேபோல தான் புதிதாக ஏதேனும் கட்டிடம் கட்ட அனுமதி வாங்க வேண்டும் என்றாலும் முழுமை திட்ட நில உபயோகம் குறித்து ஏதேனும் மாற்றம் பெற வேண்டும் என்று நினைத்தாலும் மக்கள் அனைவரும் அலுவலகத்தையே நாடி செல்ல வேண்டி இருந்தது.
இதனால் பலருக்கும் காலதாமதம் ஏற்படுகிறது என்று புகார் ஒரு பக்கம் இருந்து தான் வருகிறது. இவற்றையெல்லாம் தவிர்க்கும் வகையில் தற்பொழுது இதனையும் டிஜிட்டல் முறையில் மாற்றி விட்டனர்.
இனிவரும் காலங்களில் கட்டிடம் கட்ட அனுமதி வாங்கவும் மற்றும் முழுமை திட்ட நிலை உபயோகம் மாற்றம் செய்யவும் இணையதளம் மூலமே விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பை சேலம் மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் கூறியுள்ளார்.