சேலத்து மக்களுக்கு குட் நியூஸ்!! ஏற்காடு செல்ல அரசின் புதிய ஏற்பாடு!!
தற்பொழுது பள்ளிகள் விடுமுறை மற்றும் கோடை காலம் என்பதால் அதிக அளவில் மக்கள் தங்களது நேரத்தை குடும்பத்துடன் கழிக்க வெளியிடங்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் எழில் கொஞ்சும் வகையில் மக்களுக்கு பிடித்தமான சில இடங்கள் தமிழ்நாட்டில் உள்ளது.
அவற்றில் ஒன்றுதான் இந்த ஏற்காடு. ஊட்டியில் எப்படி வருடம் தோறும் மலர் கண்காட்சி போடப்படுகிறதோ அதே போலவே இங்கும் நடத்தப்படும். இதை காண வெளியூர் மக்கள் மட்டும் இன்றி அவ்வூூரை சேர்ந்த மக்களே தினசரி ஆயிரக்கணக்கில் வந்து செல்வர்.
அவர்களின் சிரமத்தை குறைக்கும் பொருட்டு தற்பொழுது சுற்றுலாத்துறை புதிய ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.அதுதான் சேலம் யில் இருந்து ஏற்காட்டிற்கு அழைத்துச் சென்று அனைத்து இடங்களையும் சுற்றி காட்டும் சுற்றுலா வாகனம்.
தினம்தோறும் காலை 9 மணி அளவில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இந்த சுற்றுலா வாகனம் ஆனது கிளம்பி மீண்டும் 6:00 மணிக்கு மக்களை அதே இடத்திற்கு கொண்டு வந்து விட்டு விடுகிறது.
ஒரு நபருக்கு ரூ 960 என்ற வகையில் பணம் வசூலிக்கப்படுகிறது. இதில் செல்லும் பயணிகளுக்கு உணவு முதல் தின்பண்டம் வரை அனைத்தையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக ஏற்காட்டில் உள்ள முக்கிய பகுதிகளான சேர்வராயன் மலை, இந்திய தாவரவியல் ஆய்வகம், பிக்கு பூங்கா, பக்கோடா பாயிண்ட், லேடிஸ் சீட், ரோஜா தோட்டம் என அனைத்தையும் சுற்றி காட்டுகிறது.
மேலும் இந்த வாகனத்தில் செல்லும் பயணிகளுக்கு எந்த ஒரு நுழைவு கட்டணமும் இல்லை. அதேபோல ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கும் பயண சீட்டுக்கான கட்டணம் வசூலிக்கப்படாது என கூறியுள்ளனர்.
சேலத்து மக்கள் இனி பேருந்து ஏறி அலைந்து செல்லத் தேவையில்லை. அரசின் இந்த ஏற்பாடு சேலத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.