அண்மையில் மத்திய அரசின் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் ஒரு பொதுத் தேர்வு மூலம் எழுதுவதற்காக மத்திய அமைச்சகம் தேசிய பணியாளர் தேர்வு முகமை என்ற அமைப்பை உருவாக்க ஒப்புதல் அளித்தது .
தேசிய பணியாளர் தேர்வு முகமை நடத்தும் பொதுத் தேர்வு ஆண்டுக்கு இரண்டு தடவை ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் அதனுடைய மதிப்பெண் மூன்று ஆண்டுகளுக்கு செல்லும் என்ற நற்செய்தியை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் கூறியதாவது: இந்த தேர்வை ஒருவர் தனது வயது உச்ச வரம்பை எட்டும் வரை எத்தனை தடவை வேண்டுமானாலும் எழுதலாம். எஸ்சி எஸ்டி பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர் பிரிவினருக்கும் வயது உச்ச வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
இந்தத் தேர்வானது முதலில் ஹிந்தி ஆங்கிலத்தில் நடத்தப்படும் என்றும் அதன்பின் அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளிலும் தேர்வு நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.
இந்தத் தேர்வில் மூன்று கட்டம் உள்ளது இதில் முதல் நிலையாக ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும். இந்த முதல் நிலையில் தேர்ச்சி பெறுபவர்கள் இரண்டாம் நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் மூன்றாவதாக இறுதிக் கட்டமான ஆட்கள் தேர்வு செய்யப்படும்.
சில துறைகளில் இரண்டாம் நிலைத் தேர்வு ரத்து செய்யப்பட்டு தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், உடல் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை நடத்தி ஆட்களை தேர்வு செய்யலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் தேர்வானது பெரும்பாலும் மத்திய அர. காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்காக பெரும்பாலும் பயன்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
பட்டதாரிகள் 12 மற்றும் பத்தாம் வகுப்பு தேறியவர்கள் என மூன்று தரப்புக்கும் தனித்தனியாக போட்டித் தேர்வுகள் நடத்தப்படும்.
மேலும் தேர்வு எழுதுவோரின் வசதிக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு மையம் அமைப்பதாகும் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான போட்டி வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் நம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளது