Chennai: தமிழக அரசு சாலையோர வியாபாரிகள் நலனுக்காக அவர்களின் விற்பனையை ஒழுங்குபடுத்த சிப் (chip) பொருத்திய QR Code மற்றும் இணைய இணைப்பு (Web Link) பயன்பாட்டுடன் கூடிய ஒரு புதிய அடையாள அட்டை வழங்க முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு பல சிறப்பான நல திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் சாலையோர வியாபாரிகளுக்கு ஒரு சிறந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. மிக அதிக விலை உள்ள பொருட்கள் கூட சாலையோர கடைகளில் குறைந்த விலையில் கிடைக்கும். இதனால் பல மக்கள் அந்த கடைகளில் பொருட்களை வாங்கி பயன்பெறுகிறார்கள்.
இந்த நிலையில் சாலையோர வியாபாரிகள் தங்கள் பதிவு செய்யப்பட்ட கடைகளின் விற்பனையை ஒழுங்குபடுத்த சிப் (chip) பொருத்திய QR Code மற்றும் இணைய இணைப்பு (Web Link) பயன்பாட்டுடன் கூடிய ஒரு புதிய அடையாள அட்டை வழங்கவுள்ளது. இந்த திட்டத்திற்கான முகாம் 22.11.2024 முதல் 30.11.2024 வரை அனைத்து மண்டல அலுவலகங்களில் நடைபெற உள்ளது என அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகள் பதிவு செய்யப்பட்ட கடைகள் மொத்தம் 35,588 ஆகும்.
அவர்களின் விற்பனையை ஒழுங்குபடுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்-க்கு பயன் பெற செல்லும் போது ஆதார் அட்டை, மொபைல் போன் எடுத்து வர வேண்டும். ஏனெனில் உங்கள் போனுக்கு OTP வரும். அதை மாநகராட்சி பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு பிறகு பழைய அட்டையை பெற்றுக் கொண்டு புதிய அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.