ரயில் பரிசோதகர்களுக்கு குட் நியூஸ்! வேலையை சுலபமாக்கிய சேலம் ரயில்வே கோட்டம்!

Photo of author

By Parthipan K

ரயில் பரிசோதகர்களுக்கு குட் நியூஸ்! வேலையை சுலபமாக்கிய சேலம் ரயில்வே கோட்டம்!

தற்போது பேருந்தில் பயணிப்பதை விட ரயில் பயணம் செய்யும் கட்டணம் குறைவு என்பதால் அனைவரும் ரயில் பயணத்திற்கு மாறி உள்ளனர். அதிக ரன் பயணிகள் பயணிப்பதால் பயணச்சீட்டு பரிசோதிப்பதில் சிரமம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு தற்போது கோவை டு சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் சேலம் இருந்து சென்னையில்லிருந்து  எழும்பூர் செல்லும்  விரைவு ரயில் ஆகியவற்றில் பணியாற்றும் ரயில் பயணச்சீட்டு பரிசோதனைகளுக்கு கையடக்க பரிசோதனை கருவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் மூலம் விரைவில் சோதனையை மேற்கொள்ள முடியும். மேலும் காலியாக உள்ள இருக்கைகள் படுக்கை வசதி உள்ளிட்ட விவரங்களை முன்பதிவு மையத்துக்கு அனுப்ப முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது இதன் மூலம் காலி இருக்கை குறித்து விவரத்தை தயாரிக்க உதவியாக இருக்கும் எனவும் சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் இந்த கையடக்க கருவியின் மூலம் பயணத்துக்கு வராத பயணிகள் குறித்து விவரத்தை துரிதமாக பதிவு செய்தால் முன்பதிவு செய்ய காத்திருக்கும் பயணிகளுக்கு வசதியாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கருவியை பயன்படுத்துவதால் காகித பயன்பாடும் தவிர்க்கப்படுகிறது.

மேலும் முன்பதிவு செய்து பயணத்தை ரத்து செய்பவர்களுக்கு அதற்கான கட்டணத்தை வழங்கவும் இந்த கையடக்க கருவி உதவுகிறது எனவும் கூறப்படுகிறது. பிற விரைவு ரயில்களின் பயணச்சீட்டு பரிசோதனர்களுக்கும் படிப்படியாக கையடக்க பரிசோதனை கருவி வழங்கப்படும் எனவும் சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.