வாட்ஸ் ஆப் பயனாளர்களுக்கு குட் நியூஸ்! புதிய அப்டேட்டில் இவ்வளவு அம்சங்களா?

Photo of author

By CineDesk

வாட்ஸ் ஆப் பயனாளர்களுக்கு குட் நியூஸ்! புதிய அப்டேட்டில் இவ்வளவு அம்சங்களா?

உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ் அப். மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப் தளத்தின் மூலம் தனது பயனாளர்களுக்கு பல புது புது அப்டேட்டுகளை அள்ளிக் கொடுத்துள்ளது.

இதனால் பயனாளர்களின் பாதுகாப்பும் மிக முக்கியம் என்பதால் இந்த அப்டேட்டுகளை கவனத்துடன் கையாளப்படுகிறது.வாட்ஸஅப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2 பில்லியன் (200 கோடிக்கும்) அதிகமாக உள்ளனர்.

இதில் ஏற்கனவே செய்தியை நீக்குவது, ஸ்டேட்டஸில் ஒலி இல்லாமல் செய்வது, செய்திகளுக்கு ரியாக்ட் செய்வது, ஸ்டிக்கர்ஸ், கைரேகை என பல அப்டேட்டுகளை கடந்த காலங்களில் வழங்கியிருந்தது.

குறிப்பிட்ட நபர்களுக்கு மெசேஜ்கள் அனுப்பும் போது அவர்கள் கடைசியாக பார்த்ததை மறைக்கும் வசதியும் உள்ளனர்.இதேபோல் வாட்ஸ்அப் செயலியில் ஆடியோ காலில் பேச  8 நபர்களுடன் மட்டுமே இணைக்க முடியும்.

தற்போது 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.இது மட்டுமின்றி வாட்ஸ்அப் குரூப்களில் இதுவரை அதிகப்பட்சமாக 256 உறுப்பினர்களை நேரடியாகவும், லிங்க் மூலமும் இணைக்கலாம். இந்த வசதி தற்போது 512 என இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் குரூப்களில் அட்மின்களின் அனுமதி இல்லாமல் லிங்க் மூலமாக இணையும் வசதி ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. இது பல அந்நிய நபர்களால் தவறான தகவல் அனுப்பப்படுவதோடு சமூக பிரச்சினைகளும் ஏற்பட்டது. இனி குரூப்பில் இணைய அட்மின்களின் அனுமதி அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அட்மின்களால் குரூப்களில் சேர விரும்புபவர்களின் கோரிக்கைகளை ஏற்கவும், நிராகரிக்கவும் முடியும். வாட்ஸ் அப் குழு வாய்ஸ் காலில் மியூட்  செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மேலும், வாட்ஸ் அப் கம்யூனிகேசன் தொடர்பாக பல்வேறு புதிய அட்டேட்களை வழங்கப்பட்டது.