சர்வதேச மகளிர் தினம் பெண்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்! குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் தேதி வெளியீடு?
கடந்த முறை நடந்த தேர்தலின் போது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு விதமான வாக்குறுதிகளை வழங்கியது. அதில் திமுகவானது பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டமில்லா பயண சீட்டு வழங்குதல், நான் அன்புடன் திட்டம் மற்றும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்குதல் போன்ற வாக்குறுதிகளை வழங்கியது.
எதிர்பார்த்து படியே திமுக அரசு ஆட்சிக்கு வந்தது. அதனை தொடர்ந்து முதலில் மகளிர்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயண சீட்டு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பள்ளிகளில் நான் முதல்வன் திட்டம் போன்றவற்றை நடைமுறைப்படுத்தியது. ஆனால் குடும்பத் தலைவருக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
அது குறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்கும் பொழுது விரைவில் அந்த திட்டம் அமலாகும் என கூறுகின்றனர். இந்நிலையில் இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு க ஸ்டாலின் பெண்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி வரும் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது குடும்ப தலைவர்களுக்கான மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் உதவித்தொகை தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது என தெரிவித்தார்.
மேலும் வருகின்ற 24ஆம் தேதி பட்ஜெட் தாக்களின் போது அந்த அறிவிப்பு வரும். அதன் பிறகு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு உயர்கல்வி செல்வதற்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது, மகளிர் வேரு கால விடுப்பு சம்பளத்துடன் 12 மாதங்களாக உயர்ந்தது.
அதனையடுத்து அரசு பணியிடங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மட்டுமின்றி நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, மாநகராட்சியில் பெண்களுக்கு 50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு என பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது என கூறினார்.