பெண்களுக்கு குட் நியூஸ்!! 3 லட்சத்தை வாரி வழங்கும் தமிழக அரசு!!

0
106

TN Government: தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சுய தொழில் தொடங்க சுமார் 3 லட்சம் மானியமாக வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்காக 2.22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.

தமிழக அரசு பெண்களின் நலனை கருத்தில்கொண்டு பல விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் மகளிர் உரிமை தொகையும் அடங்கும். மேலும் சுய தொழில் தொடங்க பல நடவடிக்கைகளை முன்னெடுத்து செய்துகிறது. அந்த வகையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் தேனீ வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் சுய உதவிக் குழுவினர்களுக்கு ரூ.3 லட்சம் சுழல் நிதி வழங்கி, மொத்தம் 74 தேனீ வளர்ப்புத் தொகுப்புகளை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன் மூலம் 20 உறுப்பினர் கொண்டு ஒரு குழுவில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் 5 தேனீ பெட்டிகள் என்ற முறையில் 100 தேனி பெட்டிகள் வாங்குவதற்காக ரூ.1.5 லட்சம் வழங்கப்படும். பதப்படுத்தும் இயந்திரம், தேன் சுத்திகரிப்பு, கொள்முதல் செய்ய தேவையான பொருட்கள் வாங்குவதற்காக ரூ.1.15 லட்சம் மற்றும் அதனை நிறுவுவதற்கான

செலவாக ரூ.11,000, தேன் பதப்படுத்துதல், தேனி வளர்ப்பு போன்ற பயிற்சிகளுக்கு ரூ.4,000 மற்றும் புகை மூட்டி, தேனி பிரஷ், முகக்கவசம், தேன் பிரித்தெடுக்கும் கருவி ஆகியவைகளுக்கு ரூ.20,000 என ஒட்டு மொத்தமாக ரூ.3 லட்சம் வழங்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறையில் இது மட்டும் அல்லாமல் பல செய்திகளை தெரிந்துகொண்டு தேன் மெழுகு, தேன் மகரந்தம், ராயல் ஜெல்லி என தேன் வளர்ப்பின் மூலம் பல துணைப் பொருட்கள் சேகரித்து நல்ல வருமானம் ஈட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்காக 2.22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழக அரசு பெண்களுக்கான பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி அவர்களின் முன்னேறத்திற்கு வழிவகுக்கிறது.

Previous articleசர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலியா கேப்டன்!! விமர்சனத்தால் வெளுத்து வாங்கும் கிரிக்கெட் வட்டாரங்கள்!!
Next articleபணிக்கு வராமல் ஏமாற்றிய மருத்துவர்கள்!! திடீரென ரெய்டு!! அதிர்ந்த மருத்துவமனை!!