இந்த ஒரு மாதத்தில் இன்றைக்கு தங்கத்தின் விலை வெகுவாக குறைந்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கியின் மோசமான நிலைப்பாடு டாலரை உயர்த்தியுள்ளது. தங்கத்தின் மீதான அழுத்தத்தால் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 1.5 சதவீதம் குறைந்துள்ளது.
ஒரு வாரமாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு சவரனுக்கு 496 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலையை கண்டு மக்கள் ஓரளவு மகிழ்ச்சியுடன் உள்ளனர். அனைவரும் தங்கத்தின் மீது உள்ள முதலீட்டை அதிகபடுத்தி வருகின்றனர். அமெரிக்க டாலர்கள் வலு பெற்றுள்ளதால் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.
இன்றைய தங்கத்தின் விலை;
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை:
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.62 குறைந்து
ரூ.4515 க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.496 அதிகரித்து ரூ.36120-க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை:
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.62 ரூபாய் குறைந்து ரூ.4874-க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 496 குறைந்து ரூ.38992-க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்:
வெள்ளி கடந்த ஒரு வாரமாகவே குறைந்து வருகிறது. இது அமெரிக்க டாலரில் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. வெள்ளி ஒரு கிராம் 1.30 காசுகள் குறைந்து 75.10-விற்க்கும், ஒரு கிலோ ரூ. 75100 க்கும் விற்கப்பட்டு வருகிறது. கிலோவிற்கு 1300 ரூபாய் குறைந்துள்ளது வெள்ளி.