பட்ஜெட் தாக்கலில் வெளிவந்த குட் நியூஸ்! காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா!
நேற்று காலை 10 மணி அளவில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். மேலும் தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதன் பிறகு அடுத்த ஒரு சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிவடைந்தது.
மேலும் இந்த பட்ஜெட் தாக்கலில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து வாசித்தார். இதில் இந்த நிதியாண்டில் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை மேலும் அதிகரிக்க மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 38.25 கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமரா அமைப்பு மேம்படுத்தப்படும் என்றும் கூறினார். இது தொடர்பாக அவர் கூறுகையில் சட்டம் ஒழுங்கை இந்த அரசு திறம்பட நிலைநாட்டியதன் காரணமாக தமிழ்நாடு அமைதி பூங்காவாகவும், சமுதாய நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகின்றது,
போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலை தடுப்பதற்கு அரசு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. இந்த நடவடிக்கைகளால் 13 ஆயிரத்து 491 போதை பொருட்கள் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுடைய வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து காவல் நிலையங்களில் 38.25 கோடி ரூபாய் மொத்த செலவில் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணி மேம்படுத்தப்படும்.
சமூக ஊடகங்கள் வாயிலாக தவறான காணொலிகளை பரப்பி புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே அச்சத்தை உருவாக்க அண்மையில் சமூக விரோதிகள் சிலரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் அரசின் விரிவான கடுமையான நடவடிக்கைகளால் இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயல்களில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீது 11 வழக்குகள் பதியப்பட்டு கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசின் இந்த உறுதியான நடவடிக்கை அனைவருடைய பாராட்டையும் பெற்றுள்ளது. சுமார் 4 லட்சம் புலம் பெயர் தொழிலாளர்களை மாவட்ட நிர்வாகமும் காவல்துறை அலுவலர்களும் நேரில் சந்தித்து உண்மையை விளக்கி கூறினார்கள்.
வெளி மாநிலத்தில் தொழிலாளர்கள் பணி புரிவதற்கான பாதுகாப்பான பணி சூழலை எடுத்துரைத்து அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் அனைத்தும் முயற்சிகளையும் ஜார்கண்ட் மாநில அரசுகளுடன் இணைந்து தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.