குட் நியூஸ்! அரசு பேருந்துகளில் செயல்படுத்தப்படவிருக்கும் புதிய வசதிகள்!!

Photo of author

By Pavithra

குட் நியூஸ்! அரசு பேருந்துகளில் செயல்படுத்தப்படவிருக்கும் புதிய வசதிகள்!!

மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி இறங்குவதற்கான வசதிகளை,இதற்கு மேல் வாங்கப்படும் அரசு பேருந்துகளில் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் உறுதி கூறியுள்ளது.

மாற்றுத்திரனாளிகளின் நலன் காக்கும் வகையில்,அரசு பேருந்துகள்,ரயில்கள்,கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள்,என அனைத்து அரசு சார் வாகனங்கள் மற்றும் கட்டிடங்களில்,அவர்கள் சிரம படாதவாறு சென்று வர அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரக்கோரி நீதிமன்றத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு பொதுநல வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்றம் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரவேண்டும் என்று கூறி அது குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கானது நேற்று நீதிபதிகள்,எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா
ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்,
மாற்றுத்திரனாளிகளின் நலன் கருதி,அவர்களுக்கான அனைத்து வகையான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கூறியதை தமிழக அரசு இன்னும் நிறைவேற்றவில்லை என்றும்,மூன்று ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான அரசு பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி,இறங்கும் வகையில் வசதிகள் செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.

அதற்கு தமிழக அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் இதற்குமேல் கொள்முதல் செய்யவிருக்கும் 50 அரசு பேருந்துகளில், 10 பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள்
எளிதில் ஏறி இறங்கும் வசதிகளை செய்து தரப்படும் என உறுதி கூறப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் ஏற்கனவே பிறப்பித்த அனைத்து உத்தரவுகளையும் அமல்படுத்துவது குறித்து அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தீர்ப்பு அளித்து வழக்கை வருகிற அக்டோபர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.