புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? காரணம் தெரியுமா?

0
245

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? காரணம் தெரியுமா?

ஜோதிடத்தில் 6-வது ராசியாக இருக்கும் கன்னி ராசியின் மாதம் புரட்டாசியாகும். புரட்டாசி மாதத்திற்குரிய அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புதன் சைவத்திற்குரிய கிரகம் ஆதலால் அசைவம் சாப்பிடக்கூடாது. அந்த மாதம் முழுவதும் பெருமாளை நினைத்து விரதமிருக்க வேண்டும் எனச் சாஸ்திரம் கூறுகின்றது.

எல்லாமாதங்களிலும் அசைவ உணவுகளைச் சாப்பிடுகிறோம். ஆனால், புரட்டாசியில் மட்டும் ஏன் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏதாவது கட்டாயமா? அதிலும், நம் வீட்டுப் பெரியோர்கள் ஒரு மாதத்திற்கு அசைவம் இல்லை என்று ஆணியடித்தாற் போல் சொல்லி விடுவார்கள். அசைவ பிரியர்களின் கதி அதோ கதி தான்.ஏன் சாப்பிடக்கூடாது.அப்படி என்ன தான் காரணம்?

பெரும்பாலான இந்துக்கள் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி, விரதம் இருந்து சனிக்கிழமைகளில் வீட்டில் தளிகை போடுவது வழக்கமாக வைத்திருப்பார்கள். இந்தப் புரட்டாசி மாதம் மழையுடன் தொடங்கும். பொதுவாகவே புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி, மழைநீரை ஈர்த்து வெப்பத்தைக் குறைக்க ஆரம்பிக்கும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் சூட்டைக் கிளப்பிவிடும்.

இது வெயில் கால வெப்பத்தைக் காட்டிலும் மோசமானது கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தைக் குறைக்கும். தேவையில்லாது வயிறு தொடர்பான பிரச்னையை ஏற்படுத்தும். அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி காரணமாக ஜூரம் போன்ற தொந்தரவுகள் அதிகரிக்கும்.

துளசியானது இதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதற்காகவே, புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம் ஒதுக்கி) பெருமாள் கோயிலுக்கு செல்லும் வழக்கத்தை ஏற்படுத்தினர். நமது உடல் நலனுக்காக நமது முன்னோர்கள் கடைப்பிடித்த இந்த விரதத்தை நாமும் கடைப்பிடித்து நமது உடலைப் பாதுகாப்போம்.

Previous articleஏடிஎம்-இல் ரூ.10,000க்கு மேல் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடு.. SBI அறிவிப்பு!!
Next articleகுட் நியூஸ்! அரசு பேருந்துகளில் செயல்படுத்தப்படவிருக்கும் புதிய வசதிகள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here