குட் நியூஸ்: மே 7 மற்றும் 8 தேதிகளில் வட தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு மழை கன்பார்ம்!!

Photo of author

By Sakthi

குட் நியூஸ்: மே 7 மற்றும் 8 தேதிகளில் வட தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு மழை கன்பார்ம்!!

தமிழகத்தில் வரலாறு காணாத அளவு வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது.தமிழகத்தில் பெரும்பாலான நீர் நிலைகள் வற்றி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாய சூழல் ஏற்பட்டு இருக்கிறது.மே மாதம் முழுவதும் வெப்ப அலை வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு தெரிவித்து இருக்கும் நிலையில் அக்னி வெயில் தொடங்கிய முதல் நாளான இன்று கடுமையான வெப்ப அலை வீசுவதால் தமிழகம் முழுவதும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது.இந்த அதிகப்படியான வெப்ப அலை தாக்கம் இன்னும் சில தினங்களுக்கு நீட்டிக்க கூடும் என்பதினால் பொதுமக்கள் பகல் 1 மணி முதல் 4 மணி வரை வெளியில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.குறிப்பாக குழந்தைகள்,கர்ப்பிணி பெண்கள்,வயதானவர்கள் பகல் நேரத்தில் வெளியில் செல்வதை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.

இந்த கடுமையான வெயில் தாக்கத்திற்கு இடையே வட தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது.காலையில் இருந்து மதியம் வரை கடுமையான வெயில் தாக்கம் ஏற்பட்டாலும் மாலை நேரத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

மேலும் வருகின்ற மே 7,8 ஆகிய தேதிகளில் வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பது வட மாவட்ட மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இருக்கிறது.