DMDK ADMK: அதிமுக தற்போது நடந்து முடிந்த எம்பி போஸ்டிங் ஒன்றை தேமுதிகவிற்கு தரும் என்று பெருமளவில் எதிர்பார்த்தனர். மேலும் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக எங்களுடன் இது ரீதியாக ஒப்பந்தம் போட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் எந்த ஒப்பந்தமும் போடவில்லை வேண்டுமானால் அடுத்த ஆண்டு எம்பி சீட் தருகிறோம் என கூறியது. அந்நாளிலிருந்து அதிமுக தேமுதிக கட்சிக்குள் புகைச்சல் தான்.
கூட்டணிக் குறித்தும் நாங்கள் தற்போது அறிவிக்க மாட்டோம் மாநாட்டில் தான் கூறுவோம் என தேமுதிக கூறிவிட்டது. அதேபோல அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளோம் என்பதையும் உறுதி செய்யவில்லை. மாறாக எடப்பாடி தான் அவர்கள் எங்கள் கூட்டணியில்தான் உள்ளார்கள் இனியும் இருப்பார்கள் எனக் கூறி வருகிறார். இது ரீதியாக விஜயபிரபாகரனிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக நீங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள போது ஏன் மோடியை சந்திக்க வரவில்லை என்ற கேள்விக்கு??
நாங்கள் இருக்கிறோமா?? என்று சந்தேகமாக பதில் கேள்வி கேட்டு, கூட்டணியில் இருக்கும் பட்சத்தில் அவர் கூட எங்களை சந்திக்கலாம். ஆனால் சரியான நேரத்தில் தேவையான சமயத்தில் தான் அவரை சந்திப்போம். மேலும் எங்களது கூட்டணி குறித்து மாநாட்டில் தான் தெரிவிப்போம். அதேசமயம் கமல்ஹாசன் எம்பி பதவி வகித்தது குறித்து கேள்வி எழுப்பினர். கமல்ஹாசன் எம்பி ஆக பதவி ஏற்றதை வரவேற்கிறோம்.
பல ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்த அவர் இப்போது அரசியலுக்கு வந்துள்ள நிலையில் திமுக ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளது. இதனால் மக்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசி தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். மேலும் விஜயபிரபாகரன் திமுக அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளதாக அழுத்தமாக கூறியுள்ளார்.
இதற்கு காரணம் இத்தனை ஆண்டு காலம் அதிமுகவிலிருந்து தங்களுக்கு ஒரு வாய்ப்பாளிக்காதது தான். அதுமட்டுமின்றி சமீப நாட்களாக தேமுதிகவின் பேச்சானது திமுக பக்கம் சார்ந்து தான் உள்ளது. வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் அவர்களுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பும் உள்ளது.