வியர்க்குரு பிரச்சனைக்கு குட் பாய்!! ஒரு ஸ்பூன் இந்த விதையை மோரில் ஊறவைத்து குடிங்க போதும்!!

Photo of author

By Divya

வியர்க்குரு பிரச்சனைக்கு குட் பாய்!! ஒரு ஸ்பூன் இந்த விதையை மோரில் ஊறவைத்து குடிங்க போதும்!!

Divya

வெயில் காலத்தில் அனைவரும் சந்திக்கும் வியர்க்குரு பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபட இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க.வெந்தயம்,நுங்கு,கற்றாழை போன்றவை வியர்க்குரு வராமல் தடுக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயம் – இரண்டு தேக்கரண்டி
2)மோர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் இரண்டு தேக்கரண்டி வெந்தயம் எடுத்து கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு தண்ணீரில் மூழ்கும் வரை வெந்தயத்தை ஊறவைக்க வேண்டும்.இரவில் ஊறவைத்தால் மறுநாள் இதை பயன்படுத்தலாம்.

ஒரு கிளாஸில் மோர் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் ஊறவைத்த வெந்தயத்தை போட்டுக் கொள்ள வேண்டும்.10 முதல் 15 நிமிடங்களுக்கு வெந்தயத்தை ஊறவைக்க வேண்டும்.பிறகு ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிட்டுவிட்டு மோரை பருக வேண்டும்.இப்படி தினமும் செய்து வந்தால் சருமத்தில் வியர்க்குரு புண்கள் வராமல் காத்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை துண்டுகள் – இரண்டு
2)மோர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் கற்றாழை மடல் எடுத்து தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு கிளாஸில் பசு மோர் ஊற்றி கற்றாழை துண்டுகளை போட்டு ஊறவைத்து குடித்தால் வியர்க்குரு பாதிப்பு குணமாகும்.அதேபோல் நுங்கு சிறிதளவு எடுத்து லேசாக அரைத்து உடல் முழுவதும் பூசினால் வியர்க்குரு வராமல் இருக்கும்.தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் வியர்க்குரு பாதிப்பை சந்திக்காமல் இருக்கலாம்.