3500 ஆடுகளுக்கு வேலை கொடுத்த கூகுள் நிறுவனம்! இந்த குவாலிபிகேஷன் இருந்தால் தான் பணி!
உலகில் முதன்மையான தகவல் தொழில்நுட்பமாக கூகுள் நிறுவனம் உள்ளது. கூகுள் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. இந்த வரிசையில் தற்போது ஆடுகளும் இடம் பிடித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை 3500 ஆடுகளை வேலைக்காக பணி அமர்த்தியுள்ளார். கலிபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனம், தனது அலுவலகத் தோட்டத்தில் உள்ள புல் தரைகளை சுத்தம் செய்வதற்காக இந்த ஆடுகளை நியமித்துள்ளது.
இந்த 3500 ஆடுகளும் குறைந்த அளவு கார்பன் உமிழும் தன்மை கொண்ட ஆடுகளை மட்டுமே பணி நியமனம் செய்துள்ளனர். பெட்ரோல் மற்றும் டீசல் உடன் இயங்கும் இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, இவ்வாறு 3500 ஆடுகளை கூகுள் நிறுவனம் வாடகைக்கு எடுத்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்த இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறுகின்றனர்.