நீங்க 2020இல் Google Pay-ல் செய்த மொத்த செலவு எவ்வளவு? இதோ உங்களுக்காக Google Pay’s 2020 Summary!

Photo of author

By Kowsalya

நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் GPay நிறுவனம் 2020ஆம் ஆண்டு நீங்கள் இந்த ஆண்டு முழுவதும் எவ்வளவு செலவு செய்தீர்கள்? என்பதை Gpay ஆப் மூலமாக தெரிந்து கொள்ளலாம். மற்றும் மாதாந்திர செலவினங்களையும் பார் வரைபட காட்சி மூலம் பார்த்துக் கொள்ளலாம்.
Gpay கடந்த 12 மாதங்களில் உங்களது பயன்பாட்டை காண்பிப்பதற்காக ஆண்டு மதிப்பாய்வு போக்கை தேர்ந்தெடுத்துள்ளது. GooglePay அல்லது Gpay இப்பொழுது உங்கள் 2020ஆம் ஆண்டு ஒவ்வொரு மாதத்திலும் எவ்வளவு செலவிட்டீர்கள் என்பதை விவரங்களாக காண்பிக்கும்.

இப்பொழுது Gpay Home பேஜில் சென்று உங்களது சமீபத்திய பரிவர்த்தனைகளுக்கு சென்று காணலாம். முதல் Card Gpay உடன் நீங்கள் எவ்வளவு காலம் இருந்தீர்கள் என்பதையும் எவ்வளவு பயன்பாடு செய்தீர்கள் என்பதையும் காமிக்கும். மேலும் தொடர்ச்சியான Cards பயன்பாட்டின் மூலம் எத்தனை உள்ளூர் வணிகங்களுக்கு நீங்கள் பணம் செலுத்தி உள்ளீர்கள் என்பதை காட்டுகிறது.

அடுத்த Card நீங்கள் ஆண்டுக்கு எத்தனை முறை நண்பர்களுடன் Gpay வழியாக தொடர்பு கொண்டீர்கள் மற்றும் நீங்கள் செய்த பரிவர்த்தனைகளின்( transactions) எண்ணிக்கையை காண்பிக்கும்.

அதே போல் கேஷ்பேக் மூலமாக ஆண்டுக்கு எவ்வளவு பணத்தை சேமித்தீர்கள் என்பதையும் மற்றும் அட்டை காண்பிக்கும். Go India அந்த Card நீங்கள் எத்தனை நகரங்களை விளையாட்டில் பார்வையிட்டீர்கள் என்பதை சுருக்கமாக காட்டும்.

கடைசி அட்டை ஆண்டு முழுவதும் GPay வழியாக நீங்கள் எவ்வளவு பணம் செலவிட்டு உள்ளீர்கள் என்பதை இறுதி அட்டை காண்பிக்கும். இது ஒரு பார் வரைபடத்துடன் வருடத்தின் ஒவ்வொரு மாதமும் நீங்கள் எவ்வளவு செலவு செய்தீர்கள் என்பதையும் ஒட்டுமொத்தமாக காண்பிக்கும். இந்த தகவல் டிசம்பர் 19 வரை கணக்கிடப்பட்டு உள்ளது.