தமிழ் திரை உலகில் சிறந்து விளங்கிய எஸ்.பி.பி அவர்களுக்கு கூகுள் நிறுவனம் அஞ்சலி செலுத்தியுள்ளது
தமிழ் திரையுலகில் சிறந்த விளங்கிய பாடகரான எஸ்பிபி அவர்கள் இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.இவர் எம்ஜிஆர் ,சிவாஜி கணேசன், ரஜினி ,கமல் ,மோகன், ராமராஜன், கார்த்திக், விஜய் ,அஜீத், சூர்யா, உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு பாடலை பாடி கொடுத்துள்ளார்.
இவர் இசையில் மட்டும் சிறந்து விளங்க அமைப்பதிலும் மற்றும் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்தும் சிறப்பித்துள்ளார். இப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய பாடகரை இந்திய தமிழ் திரை உலகம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இறந்தது.
இவரது மறைவுக்கு கூகுள் நிறுவன அதிகாரபூர்வ பக்கத்தில் இவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவருக்கு இந்திய குடியரசுத் தலைவர் ,பிரதமர் ,மாநில முதல்வர்கள் ,விளையாட்டு வீரர்கள் என்று பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் கூகுள் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், மறைந்த பாடகர் எஸ்.பி.பி-க்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் தமிழ் ,ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பாடலை பாடிய எஸ்.பி.பி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதனை ஸ்கிரீன் ஷாட் எடுக்க பட்ட கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதனை வெளியிட்டுள்ளனர்.
40 ஆயிரம் பாடல்களை 18 மொழிகளில் ஒரே குரலில் பாடிய பெருமையை அவர்கள் பெற்றுள்ளதாகவும், எங்கள் அஞ்சலி என்றும் உங்கள் பாடல்கள் எங்களோட அன்போடு பேசும் என்றும், உங்கள் ஆத்மா சாந்தியடையும் வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
https://www.facebook.com/GoogleIndia/posts/2842540672647027
மேலும் கூகுளின் அஞ்சலிக்கு பலரும் பாராட்டுக்களும் நன்றிகளும் தெரிவித்து வருகின்றார்கள்.