அதிரடியாக நீக்கப்பட்ட ‘Remove China Apps’ – அப்படி என்ன செய்தது இந்த செயலி?

Photo of author

By Parthipan K

கடந்த சில தினங்களாக ‘Remove China Apps’ எனும் அலைபேசி செயலி சமூக வலைதளங்கள், வாட்சாப் என அனைத்து இடங்களிலும் வைரலாகி வருகிறது.

இதன் பெயரே இதன் நோக்கத்தை சுட்டி காட்டிய்ள்ளதால் நாம் அதற்க்குள் செல்லவில்லை. அப்படி என்னதான் இந்த செயலி செய்கிறது?

சீனாவின் வுகான் மகானத்தில் தான் கொரோனா தொற்று முதன்முறையாக் தோன்றியது. அதிலிருந்தே அனைத்து நாடுகளும் சீனாவின் மீது கோபத்திலுள்ளன. கடந்த சில வாரங்களாக இந்திய – சீன எல்லையில் போர் மூள்வதற்கான பதற்றம் அதிகரித்து வருகிறது. இதனால் உலக நாடுகளை அச்சுறுத்தும் சீனா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

கடந்த மே 17ம் தேதி இந்த ‘Remove China Apps’ முதன் முதலாக அறிமுகமானது. இந்த செயலியானது , டிக்டோக், UC உலாவி போன்ற பயன்பாடுகளை நீக்குகிறது மற்றும் சீனாவை சேர்ந்த நிறுனங்களின் செயலி அலைபேசியில் தரவிரக்கம் செய்யப்பட்டிருந்தால் அதனை நீக்கிவிம். இதனால் சீனாவின் செயலியை புறக்கணிப்போம் என்ற வாசகத்துடன் இந்த செயலி தற்பொது பகிரப்பட்டு வந்தது.

இந்தியாவின் ஜெய்பூரை சேர்ந்த One Touch AppLabs எனும் நிறுவனம் இந்த செயலியை நிறுவியுள்ளது.

இந்நிலையில் இந்த செயலியை தங்கள் செயலி பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது கூகுள் நிறுவனம். அதற்க்கு காரணமாக கீழ்கண்ட விளக்கத்தை அளித்துள்ளது

  • கல்வி நோக்கத்திற்காக நிறுவப்பட்டதாக கூறப்படும் ‘Remove China Apps’ அது குறிப்பிட்ட நோக்கத்திற்கு மாறாக மற்றொரு நாட்டின் மீது அவதூறை பரப்பும் வகையில் அமைந்துள்ளது
  • குகூளின் விதிமுறைப்படி எந்த ஒரு செயலியும், மற்ற செயலியை சுயமாக முடிவு செய்வதை அனுமதிக்க முடியாது.

என்று தெரிவித்துள்ளது.