சுதந்திர போராட்ட வீராங்கனைகளை போற்றிய கூகுள்! ட்ரெண்டு ஆகி வரும் புகைப்படங்கள்!

சுதந்திர போராட்ட வீராங்கனைகளை போற்றிய கூகுள்! ட்ரெண்டு ஆகி வரும் புகைப்படங்கள்!

இந்திய நாடு பிரிட்டிஷ் அரசுக்கு கீழ் அடிமை பட்டு கிடந்தது.அவர்களிடமிருந்து காந்தி,வா.உ.சிதம்பரம் என பலர் போராடி சுதந்திரத்தை பெற்று தந்தனர்.நமது நாட்டில் உள்ள வளங்களுக்காகவே அவர்கள் இந்தியாவை அடிமை படுத்தி வைத்திருந்தனர்.அதுமட்டுமின்றி ஆண்களுக்கு சலித்தவர்கள் நாங்கள் இல்லை என்ற போக்கை அப்பொழுதே பெண்கள் நிரூபித்து காட்டியுள்ளனர்.பெண்களும் ஆண்களுக்கு இணையாக போராட்ட களத்தில் இறங்கி இந்தியா சுதந்திரத்திற்காக போராடினர்.

அதில் முதல் பெண்மணியாக நாம் பார்க்க போவது கிழக்கு வேலுநாச்சியார்.இவர் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடினார்.ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய முதல் பெண்மணி இவர் தான் என்றும் கூறுகின்றனர்.இவரையடுத்து கீட்டூர் ராணி சின்னம்மா.இவர் கர்நாடக மாநிலத்தில் இருந்த பிரிட்ஷை எதிர்த்து போராடி தன் உயிரை இழந்தார்.இன்றளவும் கர்நாடக மாநிலத்தில் இவர் புகழ் பேசப்படுகிறது.

அடுத்து ஜான்சிராணி,இவர் பிரிடிஷ்க்கு எதிராக வீரர்களை திரட்டி போராட்ட களத்தில் இறங்கினார்.இந்திய பெண்மணி வீரர்களுக்கு ஓர் எடுத்துகாட்டாக இருந்து வந்தார்.தனது இளம் குழந்தையை தனது முதுகில் சுமந்து கொண்டு போர்க்களத்தில் கலந்துகொண்டார்.இவரையடுத்து ஜானகி ஆதி நாகப்பன் இவர் மலேசியாவை சேர்ந்த பெண்மணி,இந்திய சுதந்திரத்திற்காக சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் கலந்து கொண்டார்.துப்பாக்கி ஏந்திய போர் வீராங்கனையாகவும் திகழ்ந்தவர்.

அதேபோல சுபத்ரா குமாரி ,இவர் ஜான்சிராணி பற்று உருக்குமான பாடலை எழுதியவர்.இவர் எழுதிய அனத்து கவிதைகளும் மிகவும் புகழ் பெற்றது.இவரது கவிதைகள் பல இந்திய கல்விகளில் பாடங்களில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நமது நாட்டு சுதந்திரத்திற்காக ஆண்களுக்கு இணை பெண்கள் என அன்றே நிருபித்துள்ளனர்.சமீபத்தில் கூகுள் நிறுவனம் பெண்களை சிறப்பிக்கும் விதமாக தனது தேடும் பக்கத்தில் சிறப்புமிக்க பெண்கள் புகைப்படைங்களை போட்டு வருகின்றனர்.அந்தவகையில் சுதந்திர தின விழா என்பதால்  இந்திய விடுதலைக்காக போராடிய ஜான்சிராணி பற்றி பேசிய சுபத்ரா குமாரி போன்றவர்களின் புகைப்படங்களை கார்டூன் மூலம் பிரதிபலித்து போற்றி வருகின்றனர்.

Leave a Comment