முதல் லெஸ்பியன் கிரைம் படத்தின் போஸ்டர்: கடுமையாக விமர்சனங்களுக்குள்ளான இயக்குனர்!

Photo of author

By Parthipan K

முதல் லெஸ்பியன் கிரைம் படத்தின் போஸ்டர்: கடுமையாக விமர்சனங்களுக்குள்ளான இயக்குனர்!

Parthipan K

பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் அடுத்த படமான, முதல் லெஸ்பியன் கிரைம் படத்தின்  போஸ்டர் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இயக்குனர் ராம் கோபால் வர்மாவை சர்ச்சை இயக்குனராகவே மாறி வருகிறார், தனது ட்விட்டரில் எதையாவது கருத்துக்களை வெளியிட்டு அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவார். இதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார் அவர். 

இந்த லாக்டவுனில் கிளைமாக்ஸ், நேக்கடு ஆகிய படங்களை இயக்கி தனது ஆன்லைன் தியேட்டரில் வெளியிட்டார். இந்தப் படங்கள் ஆபாசமாக இருப்பதாக ரசிகர்கள் கூறினர். இவர் தனது அடுத்தப் படம் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டார். அந்த படத்தின் ஹீரோயின் படு பயங்கர கிளாமராக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டிருந்தார். 

அண்மையில்,உச்ச நீதிமன்றத்தால் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதை அடுத்து, முதல் முறையாக அவர்களை மையமாக வைத்து இப்படம்  உருவாக்கப்படுகிறது. இதில் அப்சரா ராணி, நைனா கங்குலி இருவரும் லெஸ்பியனாக நடித்துள்ளனர்.

இந்த போஸ்டரை குறித்து, இயக்குனர் ராம் கோபால் வர்மா கூறியதாவது: நான் இரண்டு பெண்களுடைய காதலை கண்ணியமாகவும் மரியாதையுடனும் ஏ சித்தரிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய குறிக்கோள். இந்த போஸ்டர் மாஃபிங் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்

ஆனால் இந்தப் போஸ்டரை பார்க்க வலைவாசிகள் கடுமையாக எதிர்ப்பு  வெளிப்படுத்துகின்றனர். சிலர், இதுபோன்ற படங்களை எடுத்து சமூகத்திற்கும் கலாச்சாரத்திற்கும் எதிர்கால சந்ததியருக்கு பெரும் அழிவைத் தேடித் தராமல் இருக்கவேண்டும் என்று ஆவேசத்துடன் கருத்துக்களை பதிவிட உள்ளனர்.