கவுந்தப்பாடியில்  கோர விபத்து! தூக்கி வீசப்பட்டு நண்பர்கள் பலி! 

Photo of author

By Parthipan K

கவுந்தப்பாடியில்  கோர விபத்து! தூக்கி வீசப்பட்டு நண்பர்கள் பலி! 

Parthipan K

A terrible accident in Kauntapadi! Friends were thrown and killed!

கவுந்தப்பாடியில்  கோர விபத்து! தூக்கி வீசப்பட்டு நண்பர்கள் பலி! 

ஈரோடு மாவட்டம் நம்பியூர் செட்டியாம்பதி பகுதியில் வசித்து வருபவர் நடராஜன், மகன் கார்த்திக் (22), இவர்கள் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார்கள். எலத்தூர் பகுதியை சேர்ந்த ஷங்கர் என்பவரும் கார்த்திக்கும் உறவினர்கள். நேற்று இரவு கார்த்திக் மற்றும் ஷங்கர் இருவரும் குருமூர்த்தி காலனியில் உள்ள ரவிக்குமார் என்பவர் வீட்டிற்கு சென்று இரவு அங்கேயே தங்கி இருந்தனர்.

இவர்கள் இருவரும் நம்பியூர் செல்வதற்கு இன்று அதிகாலை 3 மணிக்கு மோட்டார் சைக்கிளில் கிளம்பினர். அவர்கள் கண்ணாடிப்புதூர் பழனிச்சாமி தோட்டம் அருகில் உள்ள வளைவில் திரும்பும் போது வண்டி கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் உடல்களை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்கு அனுப்பி வைத்தனர். அதிகாலை நேரத்தில் சாலை விபத்தில் நண்பர்கள் இருவர் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.