உங்களில் பலர் கறை படிந்த துணிகளை துவைக்க மிகவும் சிரமப்படுவீர்கள்.மென்மையான கறையாக இருந்தால் எளிதில் நீக்கிவிட முடியும்.ஆனால் விடாப்பிடியான கறைகளை நீக்குவது ரொம்ப கடினமான விஷயம்.ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸில் ஒன்றை பின்பற்றினால் கடினமான கறைகளும் எளிதில் நீங்கிவிடும்.
டிப் 01:
எலுமிச்சை சாறு
கல் உப்பு
ஒரு அகலமான பாக்கெட்டில் தண்ணீர் ஊற்றி ஒரு எஎலுமிச்சம் பழத்தின் சாறு சேர்க்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தூள் உப்பு சேர்த்து கலந்து விடவும்.அதன் பிறகு கறை படிந்த துணியை அதில் போட்டு அரை மணி நேரத்திற்கு ஊற விடுங்கள்.பிறகு எப்பொழும் போல் துவைத்தால் கறைகள் நீங்கிவிடும்.
டிப் 02:
பேக்கிங் சோடா
ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு கலக்கி கொள்ளவும்.பிறகு இதை துணியில் படிந்துள்ள கறைகள் மீது தடவி நன்கு உலர விடவும்.
பிறகு வாஷிங் பவுடர் பயன்படுத்தி துணியை ஊறவைத்து துவைத்தால் கறைகள் எளிதில் நீங்கிவிடும்.
டிப் 03:
டூத் பேஸ்ட்
துணிகளில் உள்ள கறைகள் மீது பல் துலக்க பயன்படுத்தும் டூத் பேஸ்டை தடவி 15 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.பிறகு இதை வாஷ் செய்தால் கறைகள் முழுமையாக நீங்கிவிடும்.
டிப் 04:
வெள்ளை வினிகர்
பாக்கெட்டில் தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி வெள்ளை வினிகர் சேர்த்துக் கொள்ளவும்.பிறகு அதில் கறை படிந்த துணியை போட்டு அரை மணி நேரத்திற்கு ஊற விடவும்.இப்படி செய்தால் துணியில் உள்ள விடாப்பிடியான கறைகள் நீங்கிவிடும்.
டிப் 05:
சோடா
துணியில் உள்ள கறைகள் மீது சோடாவை ஊற்றி சிறிது நேரம் ஊற வைக்கவும்.பிறகு இதை தண்ணீரில் போட்டு அலசி எடுத்தால் கறைகள் அனைத்தும் நீங்கிவிடும்.