முதல்வர் அவசர ஆலோசனை! கவர்னர் உடனான சந்திப்பு ரத்து!

Photo of author

By Sakthi

ஆளுனருடனான முதல்வரின் சந்திப்பு திடீரென்று ரத்து செய்யப்பட்டு இருக்கின்றது.

வைரஸ் பரவல் வந்த பிறகு ஒவ்வொரு முறையும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் முதல்வர் கொரோனா தடுப்பு பணிகள் சம்மந்தமாக விளக்கம் அளிப்பார். அந்த வகையில் இன்று மாலை 6 மணி அளவில் ராஜ்பவனில் ஆளுநரை சந்திக்க செல்வதாக இருந்தார் முதல்வர். இப்போதைய கொரோனா சூழ்நிலைகள் மற்றும் 7 பேர் விடுதலை சம்பந்தமாகவும், வேல் யாத்திரை, மற்றும் திமுகவின் பிரச்சாரம் உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக அதில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ஆளுநர் மற்றும் முதல் அவருடைய சந்திப்பு திடீரென்று ரத்து செய்யப்பட்டு இருக்கின்றது வங்க கடலில் உருவாகி இருக்கின்றன இவர் புயல் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகளுடன், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகல் ஆலோசனை செய்தார். அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான பணியில் இருப்பதால், ஆளுநர் உடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிவர் புயலின் காரணமாக முதல்வரின் பயண திட்டங்களும் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. கொரோனா தடுப்பு, மற்றும் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் தொடர்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் 25ஆம் தேதி காலையும் அரியலூர் மாவட்டத்தில் அன்றைய தினம் மதியமும் முதல்வர் ஆய்வு செய்வதாக இருந்தார்.

இந்த நிலையில் புயல் மழை எச்சரிக்கை இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் பெயரில் மேற்கண்ட நிகழ்வுகள் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது வரும் 27ஆம் தேதி காலை பெரம்பலூர் மாவட்டத்திலும் மதியம் அரியலூர் மாவட்டத்தில் முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கின்றது.